Boomi International Research Journal of Tamil
BIRJT
தமிழ்மொழி இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும்மேல் பழமைவாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த மொழியாகவும், உலகமொழிகளுள் ‘செம்மொழி’ என்னும் தகுதியையும் பெற்றுள்ள மொழி. இச்சிறப்புமிக்க மொழியில் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வினை இலக்கியம், பண்பாடு, தொல்லியல், கல்வெட்டியல், நாட்டுப்புறக்கலை, கோயிற்கலை, சித்தமருத்துவம், மொழியியல், திறனாய்வு, தமிழிலக்கிய படைப்புகள், உளவியல், பெண்ணியம், ஒப்பியல் நோக்கு, உலகளாவிய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் முதலிய தமிழ் சார்ந்த பிறதளங்களையும் நோக்குவதற்காகவும், தங்கள் கருத்துகளை பகிர்ந்திடவும் இந்த இதழ் பயன்படும் என நம்புகிறோம்.
இன்றைய சூழலில் உலகளாவிய ஆய்வுப்போக்குகளின் தரத்திற்கேற்ப தமிழாய்வினை உயர்த்துவதற்குத் தமிழில் தரமான, பன்னாட்டு ஏற்புடைய ஆய்விதழ்கள் தேவைப்படுகின்றன. தரமான கட்டுரைகள் வாயிலாகத் தங்களது பங்களிப்புக்களைச் செய்யவேண்டும். இதனை மனதில்கொண்டே பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ்(Boomi International Research Journal of Tamil) எனும் இணைய இதழ் தொடங்கப் பெற்றுள்ளது. இது சக ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படும் பல்துறை ஆய்விதழாகும். இவ்வாய்விதழ் தமிழில் எழுதப்படும் ஆராய்ச்சி அடிப்படையிலான தரமான புதுமைச் சிந்தனைகளை உள்ளடக்கிய கட்டுரைகளை ஊக்குவிப்பதற்கும், வெளியீடு செய்வதற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அமைக்கப்பட்ட களமாகும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டிதழாகத் தொடர்ந்து வெளிவரும் இந்த இணைய இதழுக்கு, அனைத்துப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் தரமான ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி, நல் ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.