Research articles as publications
- Research articles can be downloaded for free from the Boomi International Research Journal of Tamil website (www. Boomiirjtj.com).
- The research article should be in Unicode font. It can also be sent in Bamini font.
- The article should not exceed a maximum of 10 pages. It is necessary to have 1.15 line spacing between the lines of the article in A4 paper size and font size 12 (MS Office, A4 Size, 1.15 Line Spacing).
- Authors can send their articles by email to editorsbirjt@gmai.com
- The article should mainly contain an abstract, six keywords, and a conclusion.
- The name and address of the author of the article, abstract, keywords, and bibliography of the article should be sent in both Tamil and English.
- The bibliography of the references given in the article should be appropriate.
- Articles must be original. They must not be taken from other articles and must be free of plagiarism.
- Articles must be free of typos and grammatical errors. Doctoral researchers are requested to show their articles to their supervisors and get their approval before sending them.
- If you send images and illustrations that are relevant and can enhance the article, you can publish them. They will be useful to the readers.
- Those involved in academic fields of Tamil studies, other fields related to Tamil, and those involved in Tamil studies can send articles.
- Articles should not have been previously published in any other journal or magazine.
- Do not send the same article to different journals.
- Articles related to the field of Tamil studies can be sent in Tamil and English.
- It is published once in three months (May, August, November, February). Articles will be published after review and approval by the editor-in-chief. The editor-in-chief’s decision is final.
- An acceptance letter for articles selected for publication will be sent via email.
- A copyright declaration form will be obtained before articles are published.
- Authors should clearly state their name, employment details, mobile number, email, and address on the first page of the article.
ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாக நெறிமுறைகள்
ஆய்வுக்கட்டுரைகளை பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இணையதளத்தில்(www. Boomiirjtj.com) தங்களின் கட்டுரைகளை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆய்வுக்கட்டுரை, யூனிக்கோடு எழுத்துருவில் இருத்தல் நலம். பாமினி எழுத்துருவிலும் அனுப்பலாம்.
கட்டுரை, அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். A4 தாள் அளவில், கட்டுரையின் வரிகளுக்கிடையில் 1.15 இடைவெளியிடப்பட்டு, எழுத்துரு 12 அளவில்(MS Office, A4 Size, 1.15 Line Spacing) இருத்தல் அவசியம்.
கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை editorsbirjt@gmai.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
கட்டுரையில் முக்கியமாக ஆய்வுச்சுருக்கம், ஆறு குறிச் சொற்கள், முடிவுரை இருத்தல் அவசியம்.
கட்டுரையின் ஆசிரியரின் பெயர் மற்றும் முகவரி, ஆய்வுச் சுருக்கம், குறிச்சொற்கள் மற்றும் துணை நூற் பட்டியல் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் அனுப்புதல் வேண்டும்.
கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிற மேற்கோள்களுக்கான துணைநூல் பட்டியல் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
கட்டுரைகள், அசல் தன்மையுடன் இருத்தல் அவசியம். வேறு கட்டுரைகளில் இருந்து எடுக்கப்படாததாகவும், கருத்து ஒற்றுமை (Plagiarism)) இன்றியும் இருக்க வேண்டும்.
கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும். முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கட்டுரையை அனுப்புவதற்கு முன்பாகத் தங்கள் நெறியாளரிடம் காட்டி ஒப்புதல்பெற்று அனுப்பிட வேண்டுகிறோம்.
கட்டுரைக்குப் பொருத்தமானதும், வலுச் சேர்க்கக்கூடியதுமான படங்களையும், வரை படங்களையும் சேர்த்து அனுப்பினால், ஏற்புடையவற்றைப் பிரசுரிக்க முடியும். அவை வாசிப்பாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
தமிழாய்வில் ஈடுபட்டுள்ள கல்விப்புலம் சார்ந்தவர்களும், தமிழுடன் தொடர்புடைய பிற துறையினரும், தமிழாய்வில் ஈடுபட்டுள்ளவர்களும் கட்டுரைகள் அனுப்பலாம்.
கட்டுரைகள் வேறு எந்தவொரு ஆய்விதழிலோ, பத்திரிக்கையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.
ஒரே கட்டுரையை வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்ப வேண்டாம்.
தமிழாய்வுத் துறை தொடர்பான கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் அனுப்பலாம்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை(மே, ஆகஸ்டு, நவம்பர், பிப்ரவரி)பிரசுரமாகும். கட்டுரைகள் முதன்மை ஆசிரியரின் மதிப்பீடு, ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிடப்படும். முதன்மை ஆசிரியரின் முடிவே இறுதியானது.
பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கான ஒப்புதல் கடிதம், மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
கட்டுரைகள் வெளியிடும் முன்பு பதிப்புரிமை உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பம் பெறப்படும்.
கட்டுரையாளர்கள் தங்கள் பெயர், பணிநிலை விபரங்கள், கைபேசி எண், மின்னஞ்சல், முகவரி ஆகியவற்றைக் கட்டுரையின் முதல் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடவும்.